Monday, January 29, 2018

தமிழக வருவாய்த் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

அரியலூரில் கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களை 
நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கில் வருவாய்த் துறை நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடையார்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘அரியலூர் மாவட்டத்தில் 24 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ராஜேந்திரனுக்கு வேண்டப்பட்டவர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டனர்’ எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலாளர், அரியலூர் மாவட்ட ஆட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் தாலுகா தாசில்தார்கள் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்குத் தள்ளிவைத்தார் நீதிபதி.

No comments:

Post a Comment