Friday, February 19, 2016

வி.ஏ.ஓ தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

வரும், 28ம் தேதி நடைபெறவிருக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ.தேர்வுக்குநவம்பர் 12ம் தேதி முதல்டிசம்பர் 31ம் தேதி வரை,தேர்வாணைய இணையதளத்தில்தேர்வர்கள் பதிவு செய்தனர். மொத்தமுள்ள 813 பணியிடங்களுக்கான  போட்டித் தேர்வு வரும் 28ம் தேதிமாநிலம் முழுவதும் 3,566  தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இதற்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம்.
மேலும்நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெற்று கொள்ளுமாறு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment